இனி வேலை செய்யாது… நவம்பர் 30 முதல்…

#MicroSoft 

தற்போதைய கால கட்டத்தில் ஏராளமான தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் இந்த பூமியில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், அதில் ஏற்படும் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவும் மற்றும்  சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்வுகளையும், வழிமுறைகளையும் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளது.

எட்ஜ் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ் புளோரருக்கான பயனர் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி மைக்ரோசாப்ட் 365 சேவைகள் எதுவும் அடுத்த வருடம் ஆகஸ்ட் முதல் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் 11-ல் வேலை செய்யாது.

இந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் வெப் செயலி இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் 11 வேலை செய்யாது என தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

மாத்திரை கம்பெனிக்கு ஆயுத பூஜை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்….

Read Next

தீபாவளிக்கு டி.வி.யில் ரிலீசாகவுள்ள சுந்தர்.சி படம்