என்னது மூணு கிலோமீட்டருக்கு மேல வரிசையில் காத்துகிடந்த மதுபிரியர்களா……!!

       கொரோனா அச்சத்தில் ஊரே முடங்கி கிடக்கும் இந்த சமயத்தில் பல நெருக்கடிகளை தமிழக அரசு சந்தித்து வருகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. முக்கியமாக பொருளாதார நெருக்கடியால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. 

     எனவே அரசு சிறிது சிறிதாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தி வருகிறது. அதில் ஒரு அங்கமாக டாஸ்மாக் கடைகளை சில விதிமுறை கொண்டு திறக்க அரசு அறிவித்தது. 

       தமிழ்நாட்டில் மே 7 அன்று , சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதற்காக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடை இயங்கலாம் என அறிவித்தது. 

      அதற்கு 2 முதல் 5 போலீசார் வரை பாதுகாப்பு போடப்பட்டது. ஐந்து ஐந்து பேராக வரிசையில் நின்று வாங்க வேண்டும் என்றும், ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் வர வேண்டும் என்றும், முக கவசம் அணிந்தும் வரவேண்டும் என்றும், முக்கியமாக ஆதார் கட்டாயம் என்றும் அரசு அறிவித்தது.

       இதற்காக வயது வாரியாக நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், 40-50 வயதிற்குட்பட்டவர்கள் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை, 40 வயதிற்குட்பட்ட வர்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை என நேரம் ஒதுக்கப்பட்டது.

         இதற்கு எதிக்கட்சிகளிடம் இருந்தும் பல தரப்பட்ட மக்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இது ஒரு புறம் இருக்க நம் மதுப்பிரியர்கள் எதை பற்றியும் கவலைப் படாமல், கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல், கடும் வெயிலையும் கண்டு கொள்ளாமல் எத்தனை கிலோமீட்டருக்கு வரிசை நீண்டு கொண்டே சென்றாலும் வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றனர் என்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

 

Read Next

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தூள் கிளப்பும் கேரளா…….