சோதனையிலும் ஒரு சாதனையாக….. ஹைப்பர்சோனிக்…..

#HyperSonicTechnology #DRDO #NarendraModi

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப அதிவேக ஏவுகணை சோதனை என்பது நேற்று ஒடிசாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஆயுத உற்பத்தியில் அடுத்த கட்டத்தை எட்டும் முயற்சியாக, அதிவேகமாக செல்லும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட ஏவுகணை யின்  இந்த சோதனை தற்போது வெற்றியடைந்து உள்ளது. அதற்காக தலைவர்கள் அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் நமது பிரதமர் மோடி அவர்கள், “நமது விஞ்ஞானி கள் உருவாக்கிய ஸ்கிராம் ஜெட் என்ஜின் ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் இயங்கியது.

மிக சில நாடுகளே இந்த திறனைப் பெற்றுள்ளது” என தனது வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Read Previous

“மும்பை வருகிறேன்… முடிந்தால் தடுத்துப் பாருங்கள்”… கங்கனா சவால்….

Read Next

தனுஷ் பட பிரபல நடிகர் காலமானார்….