முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி…..

#pranabMukherjee #FormerPresidentOfIndia

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூளையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அதனை அடுத்து  நேற்று மாலை அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி,  மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

தற்போது டெல்லியில் வைக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி உடலுக்கு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மேலும் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Read Previous

தனி விமானத்தில் கிளம்பிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்

Read Next

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்ட வட்டம்..…..