#AyodyaRamMandirBhumiPujan #NarendraModi
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்காக 2000 ஆலயங்களின் மண் மற்றும் 100 புனித நதிகளின் நீர் சேமிக்கப்பட்டு அனுப்பப் பட்டது.
அதன் பின்பு நம் பாரத பிரதமர் மோடி அவர்கள், ஆன்மீக தலைவர்கள் சூழ, 40 கிலோ வெள்ளி செங்கலை நட்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். ”ஜெய் ஸ்ரீ ராம்” என்று உரையை துவங்கிய பிரதமர் அவர்கள், ”இது மிகவும் உணர்வுப் பூர்வமானது, நீண்ட நாள் ஆசை நிறைவேறியது என்று கூறினார்.
மேலும் இதுவரை குடிசையில் இருந்த ராமருக்கு இதன் மூலம் கோவில் கிடைக்கப் போகிறது என்றார். மேலும் அவர் இராமரின் பெயர் இன்றளவும் உள்ளதுபோல் இனி கட்டப்படும் இந்த கோவிலும் இந்திய கலாச்சாரத்தின் பெருமையை பிரதிபலிக்கும்” என்று கூறினார்.
தோராயமாக இந்த கோவில் கட்டபடுவதற்கு மூன்றரை வருடம் ஆகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இக்கோவில் 30 வருடங்களாக சேகரிக்கப்பட்ட 2 லட்சம் கற்களைக் கொண்டு 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் 360 தூண்கள் இடம் பெற்றுள்ளன.