உலகில் முதல் முறையாக மறுசுழற்சி மால்….அசத்தும் ஸ்வீடன் ரெட்டுனா மால்……

மக்கள் பொழுது போக்கிற்காக பூங்காக்கள் மற்றும் கேளிக்கை வளாகங்கள் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். அதிலும் வார விடுமுறை என்றாலே மக்கள் அனைவரும் முதலில் தேர்வு செய்வது மால்கள் தான். 

தற்போது இதுபோன்ற மால்களில் ஏற்படும் கழிவுகளை குறைக்க அவர்கள் மறுசுழற்சி முறையை பின்பற்றுகிறார்கள். இது சுவீடனில் உண்மையாகி உள்ளது. இது ‘உலகின் முதல் மறுசுழற்சி மால்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டில் ரெட்டுனா  மாலில் பழுதாகும் துணிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்து அவர்கள் அதை விற்பனைக்கு பயன்படுத்தும் செய்தி தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இது  மட்டுமின்றி  அங்குள்ள உணவகங்களில் அவர்கள் ஆர்கானிக் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு  விளைவிக்காத ( எக்கோ- ஃப்ரண்ட்லி)  உணவுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இது போன்று அனைத்து நாடுகளிலும் இந்த முறையைப் பின்பற்றினால் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அத்தியாயத்தில் இது ஒரு மைல்கல்லாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.

Read Previous

உங்க முகத்துல இருக்க எண்ணெய் பசையை போக்க வேண்டுமா…?

Read Next

நடிகர் பார்த்திபன், கவிதை வடிவில் சென்னையப்பற்றி என்ன சொன்னார்னு நீங்களே பாருங்க…!