இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு!!

கொரோனாவால் பாதிக்கபட்ட பல நாடுகளில் அமெரிக்கா அதிகமாக பாதிக்கப்பட்டது என்றே கூறலாம். மேலும் இதனால் பல பிரச்சினைகளை அமெரிக்கா சந்திக்க நேரிட்டது.
இதனால் அமெரிக்காவில் பொருளாதாரம், வாழ்வாதாரம் , சுகாதாரம் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை கொடுமையும் அங்கு தலை விரித்து ஆடியது.

இதை சரி செய்ய அதிபர் டிரம்புடன் சேர்த்து பலரும் போராடி வருகிறார்கள். இந்த கொடுமையான காலத்திலும் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு முன் வந்து உதவிய நல்ல உள்ளங்களை அதிபர் டிரம்ப் பாராட்டி வருகிறார்.

அந்த வகையில் இந்திய வம்சாவளி பெண்ணான ஸ்ரவியா அண்ணப்பரெடி என்ற 10 வயது சிறுமியை பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். இவர் மேரிலேண்ட் என்ற நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சாரணர் படையில் இருக்கும் ஸ்ரவியா தன்னுடைய நண்பர்களான லைலா, லாரன் மாட்னி ஆகியோருடன் சேர்ந்து அருகில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு 100 பிஸ்கெட் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளார்.

மேலும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனித்தனியாக 200 வாழ்த்து அட்டைகளையும் இவர் அனுப்பியுள்ளார். இந்த சிறு வயதில் இவர்களுக்கு உள்ள இந்த கொடை உள்ளத்தை பாராட்டி அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்த சிறுமிகளை கௌரவ படுத்தினார்கள்.

 

Read Previous

ஒரே நகரில் நடக்குமா ‘ஐபிஎல்’!!????

Read Next

ஞாபகத்திறனை அதிகரிக்க அர்த்தசிராசனம்