‘ஊரடங்கு உங்களுக்குத்தான்!….. பாலி தீவுக்கு அல்ல’??

ஊரடங்கு என்பது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கை தான். ஆனால் இப்போது அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை இந்த ஊரடங்கு உருவாக்கியுள்ளது.

ஆனால் சற்றே வித்தியாசமாக இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவு மக்கள் ‘இது உங்களுக்குத்தான் ஊரடங்கு ஆனால் எங்களுக்கோ பழக்கப்பட்ட ஒன்றுதான்’ என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் ஒவ்வோர் ஆண்டும் ‘நைபி‘ என்ற புது வருடத்தின் ஒரு பண்டிகையாக அங்குள்ள மக்கள் கொண்டாடுவது வழக்கம். நாம் யுகாதி கொண்டாடும் அதே நாளில் தான் அவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இது அவர்களின் புத்தாண்டு தினமாகும். அந்நாளில் அவர்கள் முழு ஊரடங்கு கடை பிடிப்பது வழக்கமாகும் என்று கூறுகிறார்கள். இது பெரிதும் வித்தியாசமான பண்டிகை தான் போலும்.
ஏன் என்று கேட்டால், ஒவ்வொரு வருடமும் பாலி மக்களின் புத்தாண்டு தினம் வேறுபடுமாம். இது நிலவின் கட்டங்களை வைத்து சாகா நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது என்றனர்.

குறிப்பாக, அந்த நாளில் அதாவது புத்தாண்டு தினத்தன்று மக்கள் யாரும் வெளியே வராமல் இருப்பார்கள் எனவும், வணிகங்கள், விமான நிலையங்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்டு இருக்கும் என்றும் கூறினார்கள். மேலும் அந்த நாளை மக்கள் சிறிதும் வெளிச்சம் இல்லாமல் ஒலி இல்லாமல் கடக்கிறார்கள்.

பலரும் கைபேசி உபயோகிக்க மாட்டார்கள். பேசுவது என்றாலும் ரகசியம் பேசுவது போல் பேசுவார்கள். காவல் துறை இதை கவனிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
இது அவர்களின் பழைமையான நம்பிக்கை ஆகும். தீவு காலியாக இருப்பதால் பேய்கள் எதுவும் அந்த தீவுக்குள் வராது என்று நம்புகின்றனர்.

ஒரு நாள் முழுவதும் அமைதியாக வாழ பழக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஊரடங்கு ஒன்றும் புதிதல்ல. தற்போது அவர்களுக்கு அனைத்து நாட்களும் நைபி பண்டிகையாகவே மாறிவிட்டது.

Read Previous

ஒல்லியா இருக்கிங்களா…?? உடல் எடையை அதிகரிக்கணுமா…??அப்போ இதை பண்ணலாம் வாங்க…!!

Read Next

உங்களுக்கு சர்க்கரை நோயா…?? சர்க்கரை நோயுடன் ஆரோக்கியமாக வாழ..!!