இராணுவத்தில் சேர விருப்பமா?????

இந்தியாவிற்கு உள்ளே எத்தனையோ பாதுகாப்புத் துறைகள் இருந்தாலும் நம் இந்திய நாட்டுக்கே அரணாய் இருந்து வெளிநாட்டவர் தாக்குதலில் இருந்து நம்மைக் காப்பதே இந்திய இராணுவத் துறை ஆகும்.

அத்தகைய இராணுவத் துறையில் இணைந்து பணியாற்ற பலருக்கும் விருப்பமுண்டு. ஆனால் இதற்கான வாய்ப்பு சிலருக்கு கிடைப்பதில்லை.
அப்படி வாய்ப்பை தவர விட்ட ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இராணுவத்தில் இணைந்து பணியாற்ற தற்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அது ‘ டூர் ஆஃப் டியூட்டி’ என்ற திட்டம் தான்.

இந்த ‘டூர் ஆஃப் டியூட்டி’ திட்டத்தின் மூலம் இது வரை வாய்ப்பைத் தாவர விட்டவர்களும், வருங்காலத்தில் சேர விருப்பமுள்ளவர்களும் இதன் மூலம் இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்றலாம்.

இத்திட்டத்தின் மூலம் குறைந்தது 3 ஆண்டுகள் வரை இராணுவத்தில் பணியாற்றலாம். தற்போது உள்ள விதிமுறைகளின் படி இராணுவத்தில் சேர்ந்தால் 10 ஆண்டுகள் கட்டாயமாக இருக்க வேண்டிய சூழல்.

எனவே இந்த விதிமுறைகளை தளர்த்தினால் இனிவரும் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் மிகுதியாக இருக்கும் என்ற நோக்கில் இது தொடர்பாக ஆலோசிக்கபட்டு வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

சிக்கன் பிரியாணியும் கேப்பை களியும் | Bangalore, Ranganna Military Hotel

Read Next

ஒல்லியா இருக்கிங்களா…?? உடல் எடையை அதிகரிக்கணுமா…??அப்போ இதை பண்ணலாம் வாங்க…!!