உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு !!!!!

                  தமிழக அரசு மே 7 ஆம் தேதியன்று மதுக் கடைகளை திறக்க உத்தரவு பிறப்பித்தது.  இதனை அடுத்து மதுக்கடைகளை திறக்கக்கூடாது என இதனை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. மேலும் பல்வேறு எதிர்க் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டமும் நடத்தினர். 

          இதன் காரணமாக மதுக் கடைகள் திறக்கப்பட்டால், சமூக இடைவெளி, முக கவசம், போன்றவற்றைக் கடை பிடிக்க வேண்டும் என்றும், ஆதார் அட்டை கட்டாயம் என்றும்  உயர் நீதி மன்றம் அறிவித்தது.

         தமிழக அரசின் உத்தரவை அடுத்து, 44 நாட்களுக்கு பிறகு மே 7 ஆம் தேதியன்று மதுக்கடைகள் திறக்கப் பட்டதால், மதுப் பிரியர்களின் கூட்டம் மதுக் கடைகளின் முன் அலை மோதியது. சில இடங்களில் முக கவசம், சமூக இடை வெளி துளி கூட காணாமல் போனது.  எனவே கொரோனா பரவுவதற்கு இதுவே முக்கிய புள்ளியாக அமைந்து விடுமோ என்று என்னும் நிலை ஏற்பட்டது.

            எனவே ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் திறக்கப்படக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஆனால் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் ஆன்லைனில் பணம் பெற்றுக் கொண்டு, மதுவை வீட்டிற்கே சென்று வழங்கிக் கொள்ளலாம் எனவும் உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு  பிறப்பித்துள்ளது.

Read Previous

Redmi Note 9 Pro Max

Read Next

அமெரிக்காவில் கடும் பொருளாதார வீழ்ச்சியா…!.!.?.?.?