அடுத்தடுத்து நடந்த விபரீதம்!!!

     விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிந்து ஏற்படுத்திய சோகம் மறைவதற்குள், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 6 வது யூனிட்டில் பாய்லர் வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.  

நெய்வேலியில் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியின் போது திடீரென பாய்லர் வெடித்து. இதனால் தீ விபதும் ஏற்பட்டது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். பாய்லர் வெடித்து சிதறிய தகவல் வெளியான சில நிமிடங்களில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


       தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பின் காயமடைந்த 10 பேரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

       இது போன்ற அடுத்தடுத்த விபரீத சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக, மாற்றுக் காட்டுப்பாட்டு வாரியமானது, ஊரடங்கு முடிந்து திறக்கப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் திறப்பதற்கான தகுந்த நிலையில் உள்ளதா என அறிந்து கொண்டு, தகுந்த பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடன் கூடிய விதி முறைகளோடும் திறக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Read Next

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தூள் கிளப்பும் கேரளா…….