கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தூள் கிளப்பும் கேரளா…….

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது. இந்த சூழலில் அனைத்து மாநிலங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு போராடி இந்த கொரோனா போரை வெல்ல முயற்சித்து வருகிறார்கள். கட்டாயமாக இந்த தருணத்தில் இயற்கை ஏழில் கொஞ்சி விளையாடும் கேரள மாநிலம் இந்த சமயத்தில் தூள் கிளப்பி வருகிறது என்றே சொல்லலாம்.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் , அப்படி வரும்போது , அதற்கான முழு பாதுகாப்புக்காக முககவசம், கையுறை, அணிந்தே வர வேண்டும் என்றும், சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்ப ட்டன.

ஆயினும் அரசு கூறுவதை பொருட்படுத்தாமல் சிலர் வெளியே ஊர் சுற்றி வந்தனர். அவர்களுக்கு காவல் துறை அறிவுரை கூறியும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.

இதில் புது விதமாக கேரளாவில் “ஒரு குடை இடைவெளி” என்ற விதி அமலுக்கு வந்தது. அதாவது அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வதாக இருந்தாலும் கையில் குடை கொண்டு வர வேண்டும் என விதிமுறை விதித்தனர். இந்த விதிமுறை நடைமுறையில் இருந்ததால் மக்கள் அனைவரும் தானாகவே சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி அமைந்தது.

இதனைத் தொடர்ந்து பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் டாக்ஸிகள் இயங்கலாம் என்றும் அதில் ஓட்டுனருடன் 2 பேர் மட்டும் பயணிக்க வேண்டும் என்றும் விதிக்கப் பட்டது. அதிலும் கேரளாவில் உள்ள டாக்சிகள் அனைத்திலும் பைபர் கண்ணடியுடன் கூடிய டாக்சிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

மேலும் அங்குள்ள மதுக்கடைகள் அனைத்தும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு முடியும் வரை திறக்கப்படமாட்டது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Read Previous

வேகமாக நோய் எதிர்ப்புச்சக்தியை பெற வேண்டுமா…???

Read Next

Redmi Note 9 Pro Max