கொரோனா அச்சமா?? அப்போ இந்த செயலியை பதிவிறக்கம் பண்ணுங்க..!!!

தமிழக அரசு  கொரோனா பரவுவதை தடுக்கவும், கொரோனா அச்சத்தை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் சிறந்த விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இதன் விளைவாக மத்திய அரசு “ஆரோக்ய சேது” செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களும், அனைத்து அரசு ஊழியர்களும், அவர்கள் மட்டும் இல்லாமல் தனியார் ஊழியர்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டார்கள்.

ஆரோக்ய சேது செயலி:

இந்த ஆரோக்ய சேது செயலியானது, பதிவிறக்கம் செய்தவுடன் அந்த நபரின்  பெயர், முகவரி, வயது என அந்த நபரின் விவரங்களை சேகரித்து கொள்கிறது. அதன் பின்பு அந்த நபர் தனது அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது, எதிர்பாரா விதமாக கொரோனா தொற்று உள்ளவரை நெருங்கும்போது ஒரு எச்சரிக்கை ஒலி எழுப்பும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த செயலியின் மூலம் தம்மிடம் இருந்து கொரோனா தொற்று உள்ளவர் எவ்வளவு தூரத்தில் உள்ளர் என்ற தகவலையும் நமக்கு தெரிவிக்கின்றது. உத்திரப்பி ரதேசத்தில் , கவுதம் புத்த நகரில் இந்த செயலி கட்டாயமாக அனைவரும் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்த பட்டது.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யாதவர்கள் மீது, அரசின் விதிமுறையை அவமதிப்பதாக வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவித்தது.

தனிநபர் தகவல் மீறல் இல்லை:

இவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அனைவரும் இந்த செயலியை தங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்தனர்.

இந்நிலையில் பிரான்சு நாட்டை சேர்ந்த எலியட் அல்டர்சன் என்ற ஹேக்கர் இந்த ஆரோக்ய சேது செயலி தனி நபர் தகவல்களை திருடப்படும் வகையில் உள்ளது என்றும், இது பாதுகாப்பானது அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை மறுத்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ,” இந்த ஆரோக்ய சேது செயலி மத்திய தகவல் தொழில்நுட்ப துறை, நிதி ஆயோக், சில தனியார் அமைப்புகள் சேர்ந்து அவர்களின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப் பட்டது என்றும், இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் மறைமுக குறியீடு கொண்டு பாதுகாப்பாக வைக்க பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும், தொற்று இல்லாத நபர் என்றால் 30 நாட்களில் அழியும்படியும்,  கொரோனா தொற்று உள்ளவராக இருந்தால் 45 முதல் 60 நாட்களுக்குள் அழியும்படியும்  உருவமைக்க பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Read Previous

வேகமாக நோய் எதிர்ப்புச்சக்தியை பெற வேண்டுமா…???

Read Next

Redmi Note 9 Pro Max