கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்த சோதனை!!!

    தமிழகத்தில் கொரோனாவின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  அது “ஆசியாவின் மிகப்பெரிய மார்கெட்”  என அழைக்கப்படும்  கோயம்பேடு மார்க்கெட் டையும் விட்டு வைக்கவில்லை. 

     கோயம்பேடு மார்கெட்டில் 412 காய்கறி விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்களுள் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. ஆரம்பக் கால கட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  கொரோனா தொற்று குறைவாக இருந்த நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் இருந்து காஞ்சிபுரம் திரும்பியவர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேட்டில் தொற்று 29 ஆக அதிகரித்தது.

     இதனால் கோயம்பேடு மார்கெட்டை சுற்றிலும் உள்ள கடலூர், அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. 

   கோயம்பேடு மார்கெட்டில் இருந்து விற்பனைக்காக சென்றவர்களால் கடலூரில் 8 பேருக்கும், அரியலூரில் 22 பேருக்கும், விழுப்புரத்தில் 3 பேருக்கும், பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதற்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததே முக்கியக்  காரணமாக அமைந்துள்ளது. 

   தற்போது விழுப்புரத்தில் தொற்று 20 ஆக உயர்ந்துள்ளது.  இதன் விளைவாக கோயம்பேட்டில் தொற்று 119 ஆக உயர்ந்தது தெரிந்தது.  தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்று 527 ஆக உயர்ந்து தமிழ்நாட்டையே அச்சத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது கோயம்பேடு மார்க்கெட் என்பது வருந்தத்தக்கது.

     இதனால் மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்காகவும், வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் சென்னை கோயம்பேடு மார்கெட் மே 5 அன்று மூடப்பட்டது.  மக்களின் நலனுக்காக தமிழக அரசு “திருமழிசை” எனும் இடத்தில் மே 7 ஆம் தேதி தற்காலிகமாக காய்கறி  மொத்த விற்பனை அங்காடி அமைக்க அனுமதி அளித்தது.

அனைத்து மக்களும் கோயம்பேடு சுற்றியுள்ள கிராமங்கலும் அந்த அங்காடியில் வந்து காய்கறிகளை வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Previous

வேகமாக நோய் எதிர்ப்புச்சக்தியை பெற வேண்டுமா…???

Read Next

Redmi Note 9 Pro Max