நீரில் மூழ்கி உயிரிழந்த பிரல நடிகர்…

#anilnedumangad #Ayyapanumkoshiyum

மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர். 

பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில வருடங்களாக இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியுள்ளன.

பிரித்விராஜ், பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தில் இவர் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.  

மாலையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள மலங்கரா அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அனில் தண்ணீரில் மூழ்கினார்.

இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர்.

ஆனால் ஆழமான பகுதி என்பதால் அவரை காப்பாற்றுவதில் முதலில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் சிறிது நேரத்திற்குப் பின் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நடிகர் அனில் பரிதாபமாக உயிரிழந்தார். 

 

Read Previous

ரசிகருக்கு ஷாக் கொடுத்த சோனு சூட்….

Read Next

ஏ.ஆர். ரகுமானின் வீட்டில் நடந்த சோகம்…