#MadrasUniversity #ArrearExam
அரியர் தேர்வு குறித்த செய்தி வெளியான நாள் முதல் மாணவர்களுக்கு மத்தியில் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன.
தற்போது அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இறுதி செமஸ்டர் தவிர, பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் விருப்பத்தின் படி மீண்டும் தேர்வு எழுதலாம் என தற்போது ஒரு அறிவிப்பு ஒன்றை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அப்படி தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு டிசம்பர் 21 முதல் ஜனவரி 6 வரை ஆன்லைனில் அரியர் தேர்வு நடத்தப் படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.