#Superstar #Electionnews
பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக தனது ரசிகர் மன்றத்தை “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றினார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கடந்த மாதம் 30-ந் தேதி ரஜினி ஆலோசனை நடத்தினார்.
பிறகு அவர் கட்சி தொடங்குவது உறுதி. டிசம்பர் 31-ந் தேதி இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்த ரஜினி “மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம்.
இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை” என்ற கோஷத்தை வெளியிட்டார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள் கடந்த 12-ந் தேதி அவரது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந் தேதிதான் கட்சி பெயரை வெளியிட இருந்த நிலையில் அவரது கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்று தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அதை வரவேற்றுள்ளனர்.