நடிகர் ரஜினிகாந்தின் திடீர் பேட்டி..

#Rajinikanth #Politics

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனை அடுத்து ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு  ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் நான் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நான் என்னுடைய முடிவை எவ்வளவு விரைவாக அறிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். நன்றி, வணக்கம்.” என்று கூறியுள்ளார்.

 

 

 

Read Previous

மண்பாண்ட கோப்பையில் டீயா…?

Read Next

ஜெயம் ரவி வெளியிட்ட பிரன்ஷிப் பாடல்….