கட்சி தொடங்குகிறாரா நடிகர் விஜய்….

#ThalapathyVijay #VijayMakkalIyakkam

வெகு நாட்களாக தளபதி விஜய் கட்சி துவங்குவது பற்றி பல வதந்திகள் வந்தன. ஏற்கனவே தளபதி விஜய்க்கு “விஜய் மக்கள் இயக்கம்” என்று ரசிகர்களால் அமைக்கப்பட்ட கட்சி ஒன்று உள்ளது.

அதன் மூலம் மக்களுக்கு பல உதவிகளை அவர்கள் செய்து வருகிறார்கள். 

குறிப்பாக கொரோனா காலத்தில் அதிகமாக துயரில் ஈடுபட்ட  மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் மூலம் உணவு அளித்து உதவி வந்தனர். 

இந்த நிலையில் தற்போது ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி  விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கூடிய விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

Read Previous

சரிவை சந்திக்கிறாரா டிரம்ப்…..

Read Next

IPL இறுதி போட்டியில் மும்பை அணி…