#WhastappUpdate #NewMessages #WhatsAppNewFeature
தற்போதைய கால கட்டத்தில் கைபேசியை உபயோகிக்காதவர்கள் எவரும் இலர். மேலும் தற்போது உள்ள காலத்தில் சமூக வலைதளங்கள் மூலம் அனைவரும் அனைத்தையும் தெரிந்து கொள்கின்றனர்.
அதில் வாட்ஸ் ஆப் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏனெனில் இதன் மூலம் நிறைய தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றன. இதற்கு ஏற்றார் போல் வாட்ஸ் ஆப்பில் புது அப்டேட்களும் வரத் துவங்கியுள்ளது.
இதே போல் தற்போது ஒரு அப்டேட் வந்துள்ளது. அதாவது மெஸேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாகவே மறைந்து விடும் வகையில் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ் ஆப்.