‘தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்று சித்தரிப்பது வேதனை அளிக்கிறது’

#MuttiahMuralitharan

இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது என்று பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்கள் வேதனை பட கூறியுள்ளார்.

அதாவது முத்தையா முரளிதரனாக  நான் படைத்த சாதனைகள் என் தனிப்பட்ட சாதனைகள் அல்ல. 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் முதலில் பாதிக்கப்பட்டது மலையகத் தமிழர்கள் தான்.

போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்தச் சூழலில் எப்படி நான் எப்படி கிரிக்கெட்டில் சாதித்தேன் என்பது பற்றிய படம் தான் 800.

அந்த சாதனைகளுக்கு பின்னால் என் பெற்றோர்கள்,  ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலருக்கும் பெரும் பங்கு உள்ளது.

ஆனால் சிலர் அறியாமையாலும் மற்றும் அரசியல் காரணத்தினாலும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்று சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என்றும் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்கள் கூறியுள்ளார்.

Read Previous

காதல் திருமணம் செய்யப்போகும் அதர்வா

Read Next

5 வருடங்களுக்கு பின் இணையும் DNA கூட்டணி…