சுவாச புத்துணர்ச்சிக்கு – சிம்மாசனம்

     எந்தவொரு வேலையை செய்தாலும் ஈடுபாடுடன் செய்யும் போதுதான் அதன் பலனை நாம் ருசிக்க முடியும். சிங்கத்தைப் போன்று அமர்ந்து செய்வதால் இந்த ஆசனத்திற்கு சிம்மாசனம் என்று பெயர் பெற்றுள்ளது. இதை செய்வதால் பலவித வழிகளில் நாம் நன்மையை பெறுகின்றோம்.

செய்முறை :-

  •     இந்த சிம்மாசனத்திற்க்கு முதலில் நாம் முட்டி போட்டு அமர்ந்து நம் பாதங்கள் இரண்டும் குறுக்கு வாட்டில் பெருக்கல் குறிபோல் ஒன்றோடொன்று இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். பாதத்தின் மீது அமர வேண்டும்.
  • பின்னர் கைகளை முட்டிகளின் மீதி இறுக்கமாக வைத்துக் கொண்டு இப்போது வாயை திறந்தபடி நாக்கை வெளி காட்ட வேண்டும். மூச்சை மூக்கின் வழியாக ஆழ்ந்து இழுக்க வேண்டும்.
  • இப்போது குரல்வளையம் திறக்காமல் சில நொடிகளுக்கு தம் பிடித்து பின் மெதுவாக வாயின் வழியில் விட வேண்டும். அப்போது ‘ ஹா’ என்ற சப்தத்தை உருவாக்கி இது போல 5 முறை நாம் செய்ய வேண்டும்.

சிம்மாசனத்தால் ஏற்படும் நன்மைகள்:-

  1. மார்பு மற்றும் முகத்தில் உள்ள பதற்றத்தை நீக்குகிறது.
  2. முகத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி புத்துணர்வைத் தருகிறது.
  3. நரம்புகளைத் தூண்டுவதன் மூலம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
  4. பிளாட்டிஸ்மாவைத் தூண்டுகிறது.
    தொண்டை புண், தொண்டை தொற்றுநோய் ஆஸ்துமா போன்ற பிற சுவாச நோய்களைத் தடுக்க உதவுகிறது.
  5. துர்நாற்றத்திற்கு சிகிச்சையளிக்க உதவலாம்.

Read Next

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தூள் கிளப்பும் கேரளா…….