ஊரடங்கு காரணமாக பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளி வைக்கப் பட்டன. குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் நேசிக்கும் ஐபிஎல், டி 20 தொடர் போன்ற பல்வேறு போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது அரசு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றது. அதன் அடிப்படையில் ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டுப் போட்டிகளை நடத்த அரசானது அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த ஐபிஎல் மற்றும் டி 20 போன்ற தொடர்கள் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வாறு போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டால் பல்வேறு நகரில் நடத்துவதற்கு பதில் ஒரே நகரில் நடத்தும் திட்டம் உள்ளதாக டிஎன்சிஏ நிர்வாகி ஒருவர் தெரிவித்தள்ளார்.
ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கினாலும் கூட, ஐபிஎல் போட்டிகள் உடனடியாக தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் எப்போதும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் சென்னை, மும்பை, ஜெய்ப்பூர் என பல நகரங்களில் நடத்தப் பட்டது.
தற்போது அந்த நகரங்கள் அனைத்தும் அதிக பாதிப்பு ஏற்பட்டு கட்டுப் படுத்தபட்ட பகுதியாக உள்ளது.
மேலும் உள்ளூர் விமானப் போக்குவரத்து போன்ற பொதுவான போக்குவரத்து எதும் இல்லாமையால் வீரர்கள் ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு செல்வதில் சிக்கல் உள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடக்க உள்ளதால் உலக கோப்பை தொடருக்கு முன்பாகவே ஐபிஎல் நடத்த வேண்டும் என்று பலவீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.