உங்க முகத்துல இருக்க எண்ணெய் பசையை போக்க வேண்டுமா…?

பெண்கள் சிலபேருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் பசை இருந்துக்கொண்டே இருக்கும். அது சிலபேருக்கு புடிக்காது. எண்ணெய் பசை போக வழியே இல்லன்னு யோசிக்கிறீங்களா..! அந்த எண்ணத்தை கண்டிப்பா மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்காகவே முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை நீக்க  இயற்கை டிப்ஸ்கள் இதோ..!

 

முட்டை வெள்ளைக்கரு 

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் 

முதலில் சிறிய பவுலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அடுத்து முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக நுரை வரும் அளவிற்கு அடிக்கவும்.   நன்றாக கலந்து வைத்துள்ள முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எலுமிச்சை சாறு சேர்த்தபிறகு நன்றாக இரண்டையும் மிக்ஸ் செய்துக்கொள்ளவும்.

மிக்ஸ் செய்த பிறகு இதை முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக வாஷ் பண்ணிக்கலாம்.  வாரத்தில் 2 அல்லது மூன்று முறை செய்து வந்தால் கண்டிப்பா முகத்தில் எண்ணெய் பசை பிரச்சனை வராது.

ஓட்ஸ் – 2 டீஸ்பூன்,தேன் – 1 டேபிள் ஸ்பூன்,எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், ஒரு சிறிய பவுலில் 2 டீஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்ததாக எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். இது மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.

நன்றாக மிக்ஸ் செய்த பிறகு முகத்தில் 10 நிமிடம் தடவி வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து தண்ணீரில் வாஷ் செய்துகொள்ளலாம். முகத்தில் பரு இருப்பவர்கள் மெதுவாக மசாஜ் செய்து வாஷ் செய்யுங்கள். 

கற்றாழை ஜெல்

முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை போக்க கற்றாழை ஜெல் நறுக்கி எடுத்துக்கொண்டு அந்த கற்றாழை ஜெல்லை இரவில் தடவி வைத்துவிட்டு பிறகு காலையில் முகத்தை நன்றாக வாஷ் செய்து கொள்ள வேண்டும். கற்றாழை ஜெல் எண்ணெய் பசை உள்ளவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும். 

 

Read Previous

இதனால் தான் ஓடிடியின் மீதான எதிர்பா்ப்பு தமிழ் ரசிகர்களிடையே அதிகமானதோ…?

Read Next

உலகில் முதல் முறையாக மறுசுழற்சி மால்….அசத்தும் ஸ்வீடன் ரெட்டுனா மால்……