முடி அடர்த்தியாக வளர வெந்தய இயற்கை டிப்ஸ்..!

வெந்தயம் வைத்து முடி உதிர்வு பிரச்சனையை செயற்கை முறை இல்லாமல் இயற்கையான வழியில் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு தெரிந்து கொள்ளலாம்….

மிக்ஸி ஜாரில் அரைத்ததை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். வடிகட்டி எடுத்து கொண்டதில் வைட்டமின் இ கேப்சுளை ஒன்று சேர்த்துக்கொள்ளவும். வைட்டமின் இ கேப்ஸுல் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சேர்க்கலாம்.

அடுத்து 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும். குளிர்ச்சி தன்மை உள்ளவர்கள் இதை தவிர்த்து கொள்ளலாம். இப்போது சேர்ந்த எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இதை தனியாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் அப்ளை செய்யவேண்டும்.

முக்கியமாக இரவு நேரத்தில் மட்டுமே இதை தடவ வேண்டும். காலையில் ஷாம்பு போட்டு தலையை வாஷ் செய்துகொள்ளலாம். இந்த முறையை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் போதும் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.

வெந்தயம் கண், கழுத்து பகுதிக்கு மிகவும் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. அதோடு முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். வெந்தயத்தில் நிக்கோடனிக் அமிலம், ப்ரோடீன் சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் இ கேப்சுலும் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு சிறந்து விளங்குகிறது.

 

Read Previous

மகன் துருவுக்காக நடிகர் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு…!

Read Next

மாஸ்டர் படத்தில் இவரும் நடித்துள்ளாராம்….