குளிர்கால அழகு பராமரிப்பு…!!

பனிக்கால அழகுப் பராமரிப்பு……

உதடுகளுக்கு பாலாடை அல்லது கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவை அல்லது வெண்ணெய் இந்த மூன்றில் ஒன்றை தினமும் தடவி மென்மையாக மசாஜ் செய்து வரலாம். உதடுகளின் வறட்சியும் வெடிப்பும் மறையும்.

குளிர்காலத்தில் சோப் பயன்படுத்தக் கூடாது. கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு, ஆரஞ்சுபழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்து உலரவைத்து மெஷினில் அரைத்துக்கொள்ளவும். குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் சோப்புக்குப் பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும்.

ஆலிவ் ஆயிலில் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து அடித்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான நீரில் கடலை மாவுக் கலவையை உபயோகித்துக் கழுவவும்.

தேன், நெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், மஞ்சள்தூள் ஆகியவற்றைக் கலந்து பாத வெடிப்புகளில் தடவி வந்தால் பனிக்கால வெடிப்பு மறையும்.

கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவையை இரவில் கால் விரல்களுக்கு இடையே தடவிக்கொண்டு படுத்தால் பனிக்காலத்தில் வரும் சேற்றுப்புண் சரியாகும்.

 

Read Previous

சுஷாந்த்துக்கு தொடர் அஞ்சலி செலுத்தும் பூமிகா

Read Next

சோகமாக பதிவு வெளியிட்ட ஸ்ரீதிவ்யா…..