வெங்காயம் தேய்ச்சா அடர்த்தியா முடி வளருமா…?

வெங்காயம் இது முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இப்போது வெங்காயத்தை பயன்படுத்தி தலை முடியில் என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.பேன் தொல்லை குறைகிறது. வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியில் அடர்த்தி அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், முடி வளர்ச்சிக்கு ஏதுவாகிறது. பொடுகு தொல்லைக்கு சிறந்த ஒரு தீர்வு.

வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி கொள்ளவும் மிக்ஸி யில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும். வெங்காய திப்பிகள் முடிகளில் சேராதவாறு வெறும் சாறை மட்டும் பயன்படுத்தவும்.

 

வெங்காய சாற்றை முடியில் தடவும் முறை

வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும். விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும். வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும்.

வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம். வெங்காய சாறுடன் வேறு சில பொருட்களை சேர்த்தும் வலுவான மற்றும் பொலிவான கூந்தலை பெறலாம்.

2 மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலசவும். இதனை தொடர்ந்து செய்வதால் வலிமையான மற்றும் பொடுகு இல்லாத கூந்தலை பெறலாம்.

 

வெங்காய சாறுடன் கறிவேப்பிலை

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையின் பயன் மிகவும் அதிகம். முடி வளர்ச்சியை அதிகரித்து , வலுவான மற்றும் கருமையான முடியை தருகிறது.

ஒரு கை கறிவேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும். இரன்டு டேபிள் ஸ்பூன் வெங்காய சாறுடன் இந்த பேஸ்டை கலக்கவும். இந்த பேஸ்டை தலையில் தடவி 1மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஷாம்பூவால் தலையை அலசவும். இவ்வாறு செய்யும் போது நன்றாக அடர்த்தியாக வளருவதைக் காணலாம்.

 

Read Previous

என்னது பூனை மீசை செடியா…?இதுல இவ்ளோ பயன் இருக்கா…?

Read Next

சமூக வலைதளங்களுக்கு குட்பை சொன்ன நடிகை த்ரிஷா…..