மீசை, தாடி வேகமாக வளர வேண்டுமா…???

ஆண்களுக்கு அழகே மீசை தான். பொதுவாக பெண்களுக்கு மீசை, தாடி வைத்த ஆண்களைத்தான் மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை, தாடியானது சரியான வளர்ச்சி இல்லாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையிலிருந்து விடுபட்டு நன்கு வளர்ப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

கடைபிடிக்க வேண்டியவை:

  • உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, மீசை, தாடியின் வளர்ச்சி இருக்கும். எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு புரோட்டீன் நிறைந்த உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை சாப்பிடலாம். இதில் உள்ள சத்துக்கள் முடியை நன்கு வளர வைக்கும்.
  • மீசை, தாடி நன்கு வளர அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • மீசை, தாடி நன்கு அடர்த்தியாக வளர விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்வது தான். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் வலு பெற்று முடி நன்கு வளர்ச்சி பெறும்.
  • டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் முடி வளர்ச்சியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் குறைவாக இருந்தால், முடி வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே இதனை அதிகரிக்க ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க்கடலை, எள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
  • உடலில் வறட்சி மற்றும் டாக்ஸின்கள் இருந்தால் சத்துக்களை பெறாமல் தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.
  • தூங்கும்போது தான் உடலின் அனைத்து பாகங்களின் பழுதும் சரியாகும். எனவே மீசை முடி நன்கு வளர்ச்சியடைய நன்கு தூங்க வேண்டும்.
  • ரோஸ்மேரி ஆயிலுடன் ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாளை ஜெல் போன்றவற்றை கலந்து தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து சிறிது ஊற வைத்து வந்தால், மீசை நன்கு வளரும்.

Read Previous

பித்தவெடிப்பா…??கவலையை விடுங்க…!!

Read Next

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி!!!!!!!