என்னது பூனை மீசை செடியா…?இதுல இவ்ளோ பயன் இருக்கா…?

இதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசை என்று பெயர் வந்தது.  இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

இது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை.  கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிறப்பாக செயல்படுகிறது.  தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது.  சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்கிறது. 

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேளைகளில்  இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த கசாயம் தயாரிக்க பூனை மீசை மூலிகையை நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும்.

சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும்.  அதாவது உப்பு சத்தின் அளவு இரத்தத்தில் அளவு குறையும்.  சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது.

Read Previous

ஆமணக்கு இலை மற்றும் ஆமணக்கு எண்ணெய்யின் அற்புத பலன்கள்…

Read Next

வெங்காயம் தேய்ச்சா அடர்த்தியா முடி வளருமா…?