பாடாய் படுத்தும் பல் வலி நீங்க…!!

நீங்க அடிக்கடி பல் வலியால் அவதிப்படுறிங்களா..?? அப்டினா உங்களுக்காகத்தான் இந்தக் குறிப்பு…
பல்வலி எப்படி இருக்கும் என்பதை சொல்லி புரிய வைக்க முடியாது. அதை அனுபவிப்பவர்களுக்கே அதன் வலி புரியும்.


உங்களுக்காக பல்வலியை குறைக்க வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு கையாழும் முறையை பார்ப்போம். இது இரண்டு நாட்களுக்கு பலன் தந்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்நதால் மருத்துவரை அணுகுவது நல்லது.

வீக்கத்துடன் இருக்கும்போது
ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். அப்படி செய்யும்போது வலிகள் குறைந்து வீக்கம் குறைவதைக் காணலாம். ஏனெனில் ஒத்தடம் கொடுக்கும்போது வலி உள்ள இடத்தில் இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வீக்கம் மற்றும் வலி குறைகிறது.


மிதமான சூடான நீரில் உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிக்கும்போது வாய் இடுக்கில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிகள் எல்லாம் வெளியேறிவிடும். இந்த முறை வீக்கம் மற்றும் தொண்டை வலி, தொண்டை புண் போன்றவற்றை ஆற்ற உதவுகிறது.


பல்வலி இருக்கும்போது பூண்டினை நசுக்கி உப்பு சேர்த்து இதை அப்படியே வலி உள்ள பற்களில் வைக்கும்போது பல் வலி சீக்கரம் குறைந்து விடும்.


கற்றாழை ஜெல் பொதுவாக பல வெனித வழிகளில் நமக்கு பயன்படுகிறது. இந்த ஜெல்லைக் கொண்டு பற்கள் மற்றும் ஈறுகள் சுத்தம் செய்ய பயன்படுகிறது. வலியுள்ள இடத்தில் ஜெல்லைக்கொண்டு மசாஜ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

Read Previous

ஞாபகத்திறனை அதிகரிக்க அர்த்தசிராசனம்

Read Next

லாக்டவுனில் உங்கள் எடை அதிகரிக்கிறதா…??