மஞ்சள் கலந்த பாலில் இவ்வளவு நன்மைகளா…!!!

தினமும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லதாகும். ஏனெனில் மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-கார்சினோஜெனிக் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் தான். இவைகள் தான் உடல் ஏதேனும் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தலும் மஞ்சள் பால் குடிக்கும்போது அதை எதிர்த்துப் போராடும். முக்கியமாக இருமல், சளி போன்ற நேரத்தில் மஞ்சள் கலந்த பால் குடிப்பது மிகவும் நல்லது.

மஞ்சள் தூள் மற்றும் பாலில் உள்ளவை:

மஞ்சளில் மாங்கனீசு மற்றும் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, சி, மக்னீசியம், நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளன. மஞ்சளில் உள்ளதைப் போல பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி, B12 போன்றவை உள்ளன.

தினமும் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்:

 • சளித்தொல்லையை நீக்குகிறது.
 • பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
 • மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்படும்.
 • தினமும் இரவில் தூங்குவதற்க்கு முன்பு வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கம் வரும்.
 • பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி போன்றவை சரியாகும்.
 • மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.
 • எலும்புகளை வலிமைப்படுத்தும்.
 • உடலின் அனைத்து பாகங்களையும் சீராக இயங்க உதவுகிறது.
  மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.
 • எனவே தலைவலியை நீக்குகிறது.

Read Previous

‘மாஸ்டர் அப்டேட்’ கொடுத்த ஆண்ட்ரியா!!

Read Next

முகம் பொலிவாக இருக்க வேண்டுமா…???