உங்களுக்கு சர்க்கரை நோயா…?? சர்க்கரை நோயுடன் ஆரோக்கியமாக வாழ..!!

எந்த நோயும் தீவிரம் அடைவதற்கு முன்பாகவே நிறைய அறிகுறிகள் மூலம் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தும். ஆரம்பக் கட்டத்திலேயே இந்த அறிகுறிகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி கவனமாகச் செயல்பட்டால் பல நோய்களை அவை தீவிரம் அடைந்து பாதிபாபை ஏற்படுத்துவதற்க்கு முன்பே தடுத்து விரட்டி விட முடியும்.

ரத்தத்தில் அதிக அளவில் குளுகோஸ் சேரும்போது, அதை நீரிழிவு நோய் என்கிறோம். கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தமோ அல்லது சுரந்த இன்சுலின் உடலில் வேலை செய்வதில் மந்தமோ அல்லது இரண்டுமோ சேர்வதினால், இந்த நோய் வரக்கூடும்.!

நோயின் அறிகுறிகள்:

 • அடிக்கடி சிறுநீர் கழிப்பது.
 • அதிகத் தாகம், அதிகப் பசி, உடல் எடை இழத்தல்
 • அதிக சோர்வு, பார்வை மங்கல், அடிக்கடி நோய்க்கிருமிகள் தொற்றுவது, உடற்காயங்கள் மெதுவாக ஆறுவது.
 • உள்ளங்கை அல்லது பாதங்களில் மரத்துப்போதல் ஆகியவை.

சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?

இந்த அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. சிலர் இந்த அறிகுறிகள் இல்லாமலேகூட இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய் வராமல் தடுப்பதிலும் அல்லது வந்தபின் உடலைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து உடல் பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது!

காரணங்கள்:

 • அதிக உடல் எடை (குறிப்பாக இடுப்பைச் சுற்றி,
 •  பரம்பரையாக இந்நோய் இருப்பது.
 • அதிக ரத்த அழுத்தம் (140/90 அல்லது அதற்கும் மேல் இருப்பது), 
 • அதிகக் கொழுப்பு, 
 • உடற்பயிற்சி இல்லாமை, 
 • ஊட்டச்சத்து இல்லாத உணவு,
 •  மன அழுத்தம் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது போன்றவை இந்நோய்க்கான சில காரணங்களாக இருக்கின்றன.

பல நோய்களுக்கு ஒரு காரணமாக இருக்கும் மன அழுத்தம் (stress) நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றியும் இந்த நோய் வரக்கூடிய காரணங்கள் பற்றித் தெரியாமல் இருப்பதுவும் அதிகமானோர் இந்த நோயைப் பெறக் காரணமாக இருக்கிறது. ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கையாள்வதாலும் நோய் பற்றிய விழிப்புணர்வாலும் இந்நோயை நாம் நிச்சயமாகத் தடுக்க முடியும்!

சர்க்கரை நோய்க்கு என்ன உணவு சாப்பிடலாம்:

நாம் உண்ணும் உணவில் கவனம் எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவை இந்நோய் வராமல் தடுப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சி கொழுப்பைக் கரைத்து சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.

யோகா மூலம் கட்டுப்படுத்துவது:

தினமும் யோகப் பயிற்சி செய்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை, மற்றும் நோய் முற்றுவது ஆகியவை குறைகின்றன. நோய் அறிகுறிகளும் வேகமாகக் குறைந்துவிடுகின்றன. மன அழுத்தம் வேகமாகக் குறைவதால் இன்சுலின் நன்கு வேலை செய்கிறது. மேலும் அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்புகளும் குறைவதால் இன்சுலின் செயல்பாட்டில் முன்னேற்றம் கிடைக்கிறது.

மன அழுத்தம் குறைந்து மன அளவில் சமநிலை ஏற்படுவதால், ஒருவரின் நடத்தை நிலையிலும் மாற்றம் தெரிகிறது. ஆசனப் பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளின்போது வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிவதால், கணையம் இன்சுலினை சுரப்பது அதிகமாகிறது. பயிற்சிகளின்போது தசைநார்கள் அதிக அளவில் குளுகோஸை எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதுடன், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவையும் வேகமாகக் குறைகிறது.

Read Previous

‘ஊரடங்கு உங்களுக்குத்தான்!….. பாலி தீவுக்கு அல்ல’??

Read Next

‘படத்துல மட்டுமில்ல, நிஜ வாழ்க்கையிலும் நீங்க ஹீரோ தான்’!