வேகமாக நோய் எதிர்ப்புச்சக்தியை பெற வேண்டுமா…???

நோய்நொடியில்லா பெருவாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சீரான உணவு உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு வாழ்வதே சிறந்த ஒன்றாக உள்ளது.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் சிறந்து விளங்குகிறது.

காய்கறி, பழங்கள்:
பச்சை காய்கறிகள், கேரட், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலம் பெற தினமும் ஊற வைத்த ஐந்து பாதாம் பருப்பு ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

இஞ்சி:  இவை வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது.நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.

பூண்டு: பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.

கீரை:  அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், தாதுக்கள், வைட்டமின்கள், இரும்புச் சத்துகள் அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும். மேலும் நோய் எதிர்ப்புச்சக்தியையும் பெறலாம்.

கேரட்: கேரட்டை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

பேரிச்சை: உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இதில், நிறைய உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.

மூலிகைகள்:
உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகை களை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

Read Next

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தூள் கிளப்பும் கேரளா…….