மன அழுத்தம் போக்கிட வழிகள் இதோ..!!

      ஸ்டிரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளை சொல்லாதவர்கள், கேட்காதவர்கள் யார் ?இவை நம் கூடப்பிறந்தவை. மன அழுத்தம் என்பது நம்மை எந்நேரத்திலும் தாக்கலாம். இது இருந்தால் உடல் ஹார்மோன்களில் மாற்றத்தை உண்டாக்கும். உதாரணமாக சொரியாஸிஸ் எனும் தோல் நோயும் வருகிறது. இதை போக்க வழிகள் இதோ..

உடற்பயிற்சி :   மனநிலை சோர்வாக இருந்தால், மனம் மட்டும் அல்ல உடலும் சோர்ந்துவிடும்… தூய்மையான காற்றில் ஆசுவாசப்படுங்கள். குறிப்பாக புத்துணர்சி தரும் உடற்பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்தால் புத்துணர்வின் அளவு அதிகமாக இருக்கும்.

யோகாசனம் : தினமும் யோகாசெய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் பொழுது மனமானது அமைதி நிலை அடையும்

சமைப்பது:  மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்யும் உணவின் மீது தான் இருக்கும். இது கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.

புத்தகம் படிப்பது:  புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் வழி. பிடித்த நல்ல புத்தகங்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியோடு இருக்கும்.

இசையை கேட்பது:  கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது. நல்ல இசையை கேட்டு மகிழ்வதே. இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.

Read Next

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தூள் கிளப்பும் கேரளா…….