நம் நாட்டில் மாரிGOLDஆ…?

மாரிகோல்டு, மஞ்சள் வண்ண பூக்களைக் கொண்ட செடி வகை. நம்ம ஊரு சாமந்திதான் அது. இதிலிருந்து கிடைக்கும் காற்று, தோல் வியாதிகளைக் குணப்படுத்தும். புத்துணர்ச்சியான காற்றை உமிழும்.

இது ஒரு சிறந்த கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது. இது சூரிய ஒளி படும் இடங்களில் வேகமாய் வளரக் கூடியது. பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

இந்த சாமந்தியில் உள்ள அமிலங்கள் மற்றும் ஸ்டரொல்ஸ் ஆகியவை சருமங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும் தன்மை கொண்டவை. கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் பாத்ரூம், சமையலறை போன்ற இடங்களில் வைத்தும் வளர்க்கலாம். தினமும் 2 மணி நேரம் எடுத்துப் போய் வெயிலில் காட்டினால் போதும் நன்றாக வளரும்.

Read Previous

வேகமாக நோய் எதிர்ப்புச்சக்தியை பெற வேண்டுமா…???

Read Next

Redmi Note 9 Pro Max