முதுகெலும்பை திடமாக வைக்கும் திரிகோணாசனம்

உடல் என்ற ஒன்று இருந்தால் மட்டும் போதாது, அதில் உறுதியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டும்.

ஒரு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலிலுள்ள அத்தனை நாடிநரம்புகளும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடலிலுள்ள அத்தனை நரம்பு மண்டலங்களும் சுறுசுறுப்பாக இயங்கினால் மட்டுமே அவ்வுடலில் நிரந்தரமாக ஆரோக்கியம் குடி கொள்ளும். அதற்கு தேவை பயிற்சி, மூச்சுப்பயிற்சியுடன் கூடிய யோகப்பயிற்சி.

மனித உடலும், உள்ளமும் உறுதியாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க இந்த ஆசனம் உதவுகிறது.

உடலை என்றும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும். இடுப்பு சதையை கரைத்து உங்களை எப்போதும் ‘‘ஸ்லிம்” மாகவே வைத்துக்கொள்ளும்.

செய்முறை :-

  •  உடலை வளைக்காமல் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். பின் இரு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு விரித்து வைத்து பின் இரு கைகளையும் தோளுக்கு நேராக பக்கவாட்டில் நீட்டிய பின் இடதுகை பக்கம் பக்கவாட்டில் இடுப்பை வளைத்து இடது கை விரல்களால் இடது பாதத்தின் அருகில் தரையை தொட வேண்டும்.
  •   அதேவேளையில் உங்கள் வலது கை வளையாமல் மேல் நோக்கி இருக்க வேண்டும். உங்கள் பார்வையும் வலதுகை விரல்களின் நுனியை பார்த்தபடி இருக்கவும்.
  • இந்த நிலையில் 10வினாடிகள் நின்றபின்பு நேராக நிமிர்ந்து வலது பக்கமும் இதேபோல் செய்ய வேண்டும்.

பயன்கள்:-

  • இடுப்புக்கு வலிமை தருகிறது. தொப்பை கரையும், முதுகுவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி நீங்கும்.
  • முதுகெலும்பிற்கு நல்ல வலுவைத் தந்து கழுத்து முதுகெலும்பு, அடி முதுகெலும்பு, நடு முதுகெலும்பு என அனைத்தையும் திடமாக்கும்.
  • இதனால் முதுகெலும்பு மற்றும் அதன் சார்ந்த உள்ளுறுப்புக்கும் பிராணசக்தி கிடைக்கிறது. உடலும் மனமும் உற்சாகம் பெறும்.

Read Previous

வேகமாக நோய் எதிர்ப்புச்சக்தியை பெற வேண்டுமா…???

Read Next

Redmi Note 9 Pro Max