#Biggbossshow #Lakshmimenon
கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் தனா நடிப்பின் மூலம் உச்சத்தை அடைந்தவர்.
இவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன.
இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் பிளேட்டுகளையும், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் இப்போதல்ல, எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன் சண்டை போடவும் போவதில்லை. இதன் பிறகு ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக வதந்திகளுடன் யாரும் வரமாட்டாங்கனு நம்புறேன்”.என லட்சுமி மேனன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.