இணையத்தளத்தில் முதல் முறையாக ‘PayPerView’ முறையில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படம்

விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் Pay per view முறையில், முதல் முறையாக வரும் 24ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.

தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவில் உலகமே ஸ்தம்பித்து உள்ளது.  இதனால் கடந்த மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மாஸ்டர், சூரரைபோற்று, கோப்ரா உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரும் நாள் தெரியாமல் உள்ளன. இந்நிலையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் திரைப்படங்கள், டிஜிட்டல் தளமான அமேசான் பிரைமில் வெளியாகின.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தொடங்கியுள்ள ரீகல் டாக்கீஸ் என்ற டிஜிட்டல் தளத்தில் பி.பி.வி (Pay per view) முறையில், விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்க வசதி செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த தளத்தில் பல குறும்படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது திரைப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி புதுமுகங்கள் நடித்துள்ள “ஒன்பது குழி சம்பத்” என்ற படம், வரும் 24ம் தேதி திரையிடப்பட உள்ளது.

 

Read Previous

கமலுடன் அடுத்த படத்தில் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்

Read Next

Madurai Special Nalli Roast – Irfan’s view