கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதிய படங்கள் வெளியாக முடியாத நிலையில் சிறு பட்ஜெட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறன்றது.
அதன்படி தமிழில் ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ படமும்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ படமும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் இந்த இணைடு படங்களும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது என்பதும் உண்மையே.
அதன்படி நேற்று ஓடிடி தளத்தில் வெளியான ‘சுபியும் சுஜாதாவும்’ படம் நல்ல படமாக உள்ளது என்று அனைவரையும் பேச வைத்துவிட்டது. தமிழிலும் இது போன்ற படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.