கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் நடிகர் கதிர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெற்றோர்களின் புகைப்படத்தை பகிர்ந்து யாரும் அறியாத புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் இவர்கள் இருவரது வாழ்க்கையும் தனக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும் என்றும், அவர்களின் கனவு மற்றும் ஆசை தான் நான் இன்றிருக்கும் இந்த இடம் என்றும், 53 வருடங்களுக்கு பிறகு நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு விஜய்யின் மாஸ்டர் படத்தில் நிறைவறியதாகவும், கூறியுள்ளார்.
மேலும் அது சிறிய வேடம் தான், இருப்பினும் அவர் கனவு நிறைவடைந்தது, ஹேப்பி பர்த்டே அப்பா என்று பதிவிட்டுள்ளார்.