சுஷாந்த்துக்கு தொடர் அஞ்சலி செலுத்தும் பூமிகா

சுஷாந்தசிங் மரணம் மர்மமாகவே உள்ளது.  எம்எஸ் தோனி பட நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் ஜுன் 15ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் இந்தியத் திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியுற வைத்தது.

பாலிவுட்டில் உள்ள வாரிசு சினிமா அரசியல் தான் அவருடைய தற்கொலைக்குக் காரணம் என பெரும்பாலான ரசிகர்கள் குற்றம் சாட்டினர். 20 நாட்கள் ஆன பிறகும் அவருடைய மரணத்தின் அதிர்ச்சி இன்னும் பலருக்குக் குறையாமல் உள்ளது. அவர்களில் ஒருவர் நடிகை பூமி. தோனி படத்தில் சுஷாந்தின் பாசமான அக்காவாக நடித்தவர் பூமிகா. சுஷாந்த் மறைந்ததில் இருந்து அடிக்கடி அவருடைய நினைவுகளை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

நேற்றும் சுஷாந்த் கவலையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் பூமிகா. “20 நாட்களாகிவிட்டது, எழுந்த பின் உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்ன இது என அதிர்ச்சியில்தான் உள்ளேன். ஒரு முறைதான் உடன் சேர்ந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது என்ன மன அழுத்தம், தனிப்பட்டதா,” எனக் கேட்டு நீளமாக பதிவிட்டிருக்கிறார்.

தோனி படத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், படத்தில் சுஷாந்தும், பூமிகாவும் எந்த அளவிற்கு தம்பி, அக்காவாக பாசமாக நடித்திருப்பார்கள் என்று. இதனால் தாய் பூமிகா மிகவும் சோகமாக உள்ளார்.

 

Read Previous

60 மில்லியனைக் கடந்த மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ சாங்…!!

Read Next

குளிர்கால அழகு பராமரிப்பு…!!