தனுஷ் மற்றும் அதிதி ராவ் குரலில் ‘காத்தோடு காத்தானேன்’…… இசையில் மிரட்டிய ஜிவி பிரகாஷ்…..!

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்து நடித்துள்ளார். 

இந்த படத்தில்  அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதனை அடுத்து இந்த படத்திலுள்ள ‘காத்தோடு’ என்ற பாடலை தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ளதாகவும், அதனை கபிலன் எழுதியுள்ளதாகவும், விரைவில் அந்த பாடல் வெளிவரும் என்றும் சமீபத்தில் ஜிவி கூறியிருந்தார்.

தற்போது சோனி மியூசிக் சவுத் நிறுவனம் இந்த பாடலை வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

 மேலும்  தனுஷ் மற்றும் அதிதி ராவ் அவர்களின் குரலில் இந்த பாடல் மிகவும் இனிமையாக உள்ளது என்றே கூறலாம். இதற்கு ஜிவி பிரகாஷ் அவர்களின் இசை கூடுதல் பலம் என்று சொன்னால் மிகையாகாது. ஹிட் பாடல்களின் வரிசையில் இந்த பாடலும் இடம் பெறும் என்பதற்கு எந்த வித சந்தேகமும் இல்லை.

 

 

Read Previous

இப்படி இருப்பதால் தான் கால் வலி ஏற்படுகிறதா…?

Read Next

இயக்குநர் ஷங்கருடன் இணையும் தளபதி விஜய் மற்றும் சியான் விக்ரம் கூட்டணி…?