சமூக வலை த்தலங்களான டிவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நடிகர் நடிகைகள் எப்போதும் தங்களை பிஸியாக வைத்திருப்பார்கள். அதுவும் தற்போது லாக் டவுன் என்பதால் அவர்களுக்கு முழு நேர பொழுது போக்காகவே அது மாறிவிட்டது.
இதனால் அவர்கள் அனைவரும் தங்கள் ரசிகர்களுடன் உரையாடுவது சமையல் வீடியோ பதிவிடுவது , உடற்பயிற்சி மற்றும் தங்கள் புகைப்படங்கள் போன்றவற்றைப் பதிவிட்டு தங்களது டிவிட்டர் பக்கதை எப்போதுமே பரபரப்பாகவே வைத்திருப்பார்கள்.
தற்போது இது போன்ற வலைத்தளங்களிலிருந்து நடிகை திரிஷா விலகியுள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும் இது போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக உள்ள நடிகைகளில் நடிகை த்ரிஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது ‘ இந்த நேரத்தில் எனது மனதுக்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். இப்போதைக்கு இது வேண்டாம். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்’ என்றார்.
இதற்கு முன்பு ஒருமுறை டிவிட்டரிலிருந்து அவர் விலகியுள்ளார். சில மாதங்களுக்கு பிறகு திரும்பவும் வந்தார். அதுபோல் திரிஷா இடைவெளிவிட்டு திரும்ப வருவார் என அவரது ரசிகர்கள் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.