தமிழ் திரையுலகில் தல தளபதி என்றால் அறியாதவர்கள் யாருமில்லை. இவர்கள் இருவருக்குமே கடல் அளவு ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே அருமையான நண்பர்கள். ஆனால் இவர்கள் ரசிகர்கள் மட்டும் ஏன் இவ்வாறு சண்டை போடுகிறார்கள் என்று யாருக்குமே தெரிய வில்லை.
ஆரம்ப காலத்தில் இருந்தே தல தளபதி ரசிகர்கள் இடையே சமூக வலை தளங்களில் சண்டைக்கு பஞ்சமே இல்லை. எலியும் பூனையும் போல எப்போதுமே இருப்பார்கள். தல தளபதி இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்ததோடு இவர்கள் இருவரும் மீண்டும் இணையவில்லை.
இது குறித்து பல வருடங்களுக்கு முன்பு அஜித் அளித்துள்ள ஒரு பேட்டியில் நானும் விஜய்யும் இணைந்து நடிக்காததற்கு காரணம் என்ன என கூறியுள்ளார்.அதாவது நாங்கள் இருவரும் தனித்தனியாக நடித்தால் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். இதனால் அவர்கள் பயனடைவார்கள்.
எனவே நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால் பயன்பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையும். இதுவே காரணம் என்றும் மேலும் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்காததற்கான காரணங்களில் இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்றும் தல அஜித் கூறியது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.