தனுஷ் ரசிகர்களுக்கு கிடைத்த D 43 அப்டேட்….

ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜகமே தந்திரம்” இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

வைரஸ் தொற்று காரணமாக பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேதி தள்ளி போனது. அதே போல் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படமும் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த படம் நிறைவு பெற்ற உடன் இதற்கு அடுத்ததாக நடிகர் தனுஷ் அவர்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிய சில நாட்களே உள்ளன எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .

மேலும் சமீபத்தில் இணையத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் பேசிய ஜி வி பிரகாஷ் அவர்கள் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ஜெயில் படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ள தாகவும் கூறினார். மேலும் அவர் ரசிகர்கள் கேட்ட அப்டேட்டிற்கு படத்தில் நான்கு பாடல்கள் முடிந்துள்ளது என D 43 அப்டேட்டையும் கொடுத்து உள்ளார்.

Read Previous

நடிகை குஷ்புவிடம் கிண்டல்…..! வெளுத்து கட்டிய குஷ்பு….அசிங்கப்பட்டுப்போன ஆசாமி….!

Read Next

நோய் நொடி இல்லாமல் வாழ ஆசைப்படுறிங்களா…? யோகாவ செய்யுங்க…!