‘படத்துல மட்டுமில்ல, நிஜ வாழ்க்கையிலும் நீங்க ஹீரோ தான்’!

தூத்துக்குடியில் ஊரடங்கு காரணமாக சிக்கியிருந்த பெண்களை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அவர்களின் குடும்பத்தில் சேர்த்த பெருமை தளபதி விஜய் அவர்களையே சாரும்.

ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த 11 பெண்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுள்ளனர். அதில் தேவிகா என்பவரைத் தவிர அனைத்து பெண்களும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தங்களிடம் இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்ட நிலையில், பேருந்து நிலையங்களில், கோவில்களில் என ஆங்காங்கே தங்கியுள்ளனர். பணம் தீர்ந்து விட்ட நிலையில் அனைவரும் செய்வதறியாது திண்டாடியுள்ளனர்.
அங்குள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் மூலமாக இந்த தகவல் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிஸி ஆனந்த் அவருக்கு சென்றது. 

அதன் பின்பு இந்த தகவல் நடிகர் விஜயின் காதுக்கு வர, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு போன் செய்து உடனே அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு கூறியுள்ளார்.
அதன் பின்பு, அந்த பெண்கள் அனைவரும் அரசின் அனுமதி பெற்று முறையாக, விதிமுறைகளை பின்பற்றி அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டர்கள்.

ஒரே ஃபோன் காலில் 11 பெண்களை காப்பாற்றிய தளபதி விஜயின் இந்த செயல் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Read Previous

உங்களுக்கு சர்க்கரை நோயா…?? சர்க்கரை நோயுடன் ஆரோக்கியமாக வாழ..!!

Read Next

‘பொன்னியின் செல்வன்’ டபுள் ட்ரீட்!!