சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட அப்டேட்…

#Sivakarthikeyan #Doctormovie #Doctorupdate

சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக தடைபட்டிருந்த இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

குரூப் 1 தேர்வில் இடம்பெற்றுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி

Read Next

ரஜினியைப்போல மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்