#Lingusami #Ragavalawrence
ஒரு காலத்தில் மாஸ் இயக்குனராக இருந்து பின்னர் தமாஷ் இயக்குனராக மாறியவர் தான் லிங்குசாமி.
அஞ்சான் என்ற ஒற்றை படத்தின் மூலம் தன்னுடைய மொத்த மார்க்கெட்டையும் இழந்து திண்டாடி கொண்டிருக்கிறார்.
இதை அவரே பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். அஞ்சான் படம் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை பெறாததால் தனக்கு நிறைய சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து மீளமுடியாமல் தற்போது வரை தடுமாறி வருவதாகவும் கூறியுள்ளார்.
அஞ்சான் படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் மூன்று வருடங்கள் கழித்து சண்டக்கோழி 2 என்ற படம் வெளியானது.
ஆனால் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் அடுத்ததாக ராகவா லாரன்ஸுடன் ஒரு படத்தின் களம் இறங்க உள்ளாராம்.
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ராம் சரணின் ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.