#Vijaysethupathi #Mugizhmovie
நடிகர் விஜய் சேதுபதி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்பு ஹீரோவாக தனது கடின உழைப்பின் மூலம் முன்னேறியுள்ளார்.
இவரது படங்கள் அனைத்தும் வெற்றிப்படமாகவே இருந்த நிலையில், சிந்துபாத் படம் மூலம் தனது மகனை நடிக்க வைத்த விஜய் சேதுபதி, தற்போது தனது மகளையும் முகிழ் என்ற படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி.
இவர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும் தற்போது அறிமுகமாக உள்ளார்.
விஜய் சேதுபதி, ரெஜினா கசண்ட்ரா நடிப்பில் உருவாகி உள்ள முகிழ் என்ற படம் மூலம் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார்.
கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லரை நாளை புத்தாண்டன்று மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.