மீண்டும் ஜோடி சேரும் சிம்பு நயன்தாரா?

#Simbhu #Nayanthara

வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்த சிம்பு நயன்தாரா, தற்போது மீண்டும் ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது.

குண்டாக இருந்த சிம்பு உடற்பயிற்சி செய்து உடல் எடையை 30 கிலோ வரை குறைத்தார.  இதனால் ஒரே மாதத்தில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார். 

 

தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடமும் கதை கேட்டுள்ளாராம். 

இப்படத்தில் ஹீரோவை போன்று ஹீரோயின் கதாபாத்திரமும் படம் முழுக்க பயணிக்குமாம். இந்த கதாபாத்திரத்தில்நடிக்க நடிகை நயன்தாராவை படக்குழு அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டால், இது சிம்புவுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படமாக அமையும். இவர்கள் இருவரும் ஏற்கனவே வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Read Previous

நயன்தாரா பற்றி சர்ச்சையை கிளப்பிய ஆண்ட்ரியா

Read Next

விஜய் சேதுபதியின் மகள் நடிக்கும் முதல் படம் இதுதானாம்…